உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொழுதுபோக்கு, கலாசார மையம்: கவர்னர், முதல்வர் திறந்து வைப்பு

பொழுதுபோக்கு, கலாசார மையம்: கவர்னர், முதல்வர் திறந்து வைப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் பொழுதுபோக்கு மற்றும் கலாசார மையத்தை, கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தனர்.புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், நகர பொழுது போக்கும் மையம் ரூ.5.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 3,400 பேர் அமரும் வகையில், அரங்கம் உள்ளது.இந்த மையத்தில் இருந்து, கடல் அழகை ரசிக்கும் வகையில், துாண்கள், அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய அரங்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.இங்கு ஓய்வறைகள், சமையலறை மற்றும் மிகப்பெரிய பல்நோக்கு வளாகங்கள், உணவு வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதேபோல், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் சுற்றுலாத்துறை நிதியின் மூலம், கலாசார மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 2.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில் கண்காட்சி, விழாக்கள் நடத்துவதற்கு ஏற்ற வகையில், வடிவமைக்கப்பட் டுள்ளது.இந்த இரு மையங்களையும் கவர்னர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தனர்.நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், எம்.எல்.ஏ.,கள் ஆறுமுகம், ரமேஷ், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை