மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
2 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
2 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
2 hour(s) ago
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் முன், ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக செங்கல்பட்டு வரை செல்லும் மாநகர பேருந்துகள் நின்று செல்கின்றன.தேபோல், அரசு மற்றும் தனியார் தொலைதுார பேருந்துகளும், இங்கு நின்று, பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன.ஆனால், இந்த நிறுத்தத்தின் முன் இடைவெளி விடாமல், ஷேர் ஆட்டோக்கள் அணிவகுத்து நிறுத்தப்படுவதால், இங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், நிற்கக்கூட இடமின்றி தவிக்கின்றனர்.அது மட்டுமின்றி, நிறுத்தத்திற்கு வரும் பேருந்துகளும், நிற்க இடமின்றி, சாலையிலேயே நின்று பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன.இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:ஊரப்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம், தைலாவரம், மறைமலை நகர் வரை ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.இதில், கூடுவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில், ஷேர் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தப்படுகின்றன. அதனால், பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பேருந்துகளுக்கும், அங்கு நிற்கும் பயணியருக்கும் இடையூறாக உள்ளது.மேலும், சர்வீஸ் சாலையை பயன்படுத்தி செல்லும் வாகன ஓட்டிகளும், சிரமம் அடைகின்றனர்.எனவே, பேருந்து நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்த தடை விதிக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago