உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி வெறி 80 வயது மூதாட்டி அடித்துக் கொலை

பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி வெறி 80 வயது மூதாட்டி அடித்துக் கொலை

வியாசர்பாடி, மாதவரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மீனா, 80. இவரது ஒரே மகளான பத்மாவதிக்கு, திருமணமாகி குடும்பத்துடன் பெருமாள் கோவில் முதல் தெருவில் வசிக்கிறார்.நேற்று முன்தினம் வெகுநேரமாகியும் மூதாட்டி வெளியில் வராததால், எதிர் வீட்டில் வசிக்கும் விஜயகுமாரி, சந்தேகமடைந்து கதவை திறந்து பார்த்துள்ளார்.அப்போது, மூதாட்டி தலையில் ரத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வியாசர்பாடி, எம்.கே.பி.நகரைச் சேர்ந்த ரவுடி முரளி கிருஷ்ணன், 37, என்பவர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.மூதாட்டியின் வீட்டில் இருந்து முரளி கிருஷ்ணன் தப்பியோடிய காட்சிகள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.விசாரணையில் தெரிய வந்ததாவது: தினமும் வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்குவதை, மூதாட்டி வழக்கமாக வைத்து உள்ளார்.கடந்த 15ம் தேதி நள்ளிரவு, மதுபோதையில் முரளிகிருஷ்ணன் மூதாட்டியின் வீட்டருகே சென்றுள்ளார். அப்போது, கதவு திறந்திருப்பதை பார்த்து உள்ளே புகுந்த முரளிகிருஷ்ணன், துாங்கி கொண்டிருந்த மூதாட்டியை கட்டி பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.அவர் கத்தவே, அருகில் இருந்த மரக்கட்டையால் மண்டையில் தாக்கி விட்டு தப்பி உள்ளார். இதில், ரத்தவெள்ளத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து, போலீசார் நேற்று முரளி கிருஷ்ணனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர் மீது இரண்டு கொலை, வழிப்பறி உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை