உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதைக்கப்பட்ட குழாயில் காஸ் கசிவு திடீரென உப்பிய ஆவடி சாலை

புதைக்கப்பட்ட குழாயில் காஸ் கசிவு திடீரென உப்பிய ஆவடி சாலை

ஆவடி, வீடுகளுக்கு குழாய் வாயிலாக காஸ் வினியோகம் செய்வதற்காக, சாலைகளில் குழாய் புதைக்கும் பணியை, தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில், குழாய் பதிப்பு பணி நடக்கிறது.இந்நிலையில், ஆவடி பேருந்து நிலையம், அண்ணாதுரை சிலை அருகே புதைக்கப்பட்டிருந்த காஸ் குழாயில், நேற்று முன்தினம், காஸ் அனுப்பி சோதனை செய்யப்பட்டது. அப்போது, குழாயில் காஸ் கசிவு ஏற்பட்டதால், வேகத்தடை அமைப்பு போல், சாலை மேடாக மாறியது.தகவலறிந்த ஆவடி போலீசார், மேடான சாலையைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்தனர். இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த, தனியார் காஸ் நிறுவன ஊழியர்கள், சாலையை தோண்டி குழாயில் ஏற்பட்ட காஸ் கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இரவு பெய்த மழையால், பணிகள் நிறுத்தப்பட்டன. பின், நேற்று காலை மீண்டும் பணிகள் துவங்கி, குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டது.வாகனங்கள் நெரிசலின்றி செல்ல போக்குவரத்து போலீசார் வழி ஏற்படுத்தி உள்ளனர். மாற்று வழியில் அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 12, 2024 15:17

பைப்புகள் பதித்த பின், உயர் அழுத்த காற்றை அனுப்பி இணைப்புகளில் கசிவு இருக்கிறதா என்று பரிசோதிப்பது சரியான நடைமுறை. இதன்மூலம் கசிவு ஏற்படும் இடங்களை சரிசெய்ய முடியும். அந்த குழாய்கள் 100 பசி அளவிற்கு அழுத்தம் தாங்கும் என்றால் 120 பசி அளவிற்கு அழுத்தம் கொடுத்து சோதனை செய்வார்கள். இறுதியில் பயனுக்கு வரும்போது வெறும் 80 பசி அளவிற்கே உண்மையான எரிவாயுவை செலுத்துவார்கள். செய்தியும் தவறு, வாசகர் கருத்தும் தவறு.


karthik
ஜூலை 12, 2024 16:10

அது எல்லாம் தெரியும் pats.. இவர்கள் தரமாக வேலை செய்திருந்தால் டெஸ்டிங் செய்த போது கசிவு வந்திருக்க கூடாது.. அதை தான் சொல்கிறேன் இந்தியாவில் இந்த மாதிரி திட்டம் எல்லாம் ரொம்ப சிரமம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 12, 2024 16:42

தரப் பரிசோதனை என்றால் என்னவென்று தெரியாதவர் போல. சிறுக துவங்கி பெருகும் வளர்ச்சி. கம்ப்யூட்டர் வேண்டாம் என்று குதித்த உண்டியல் வாரிசுகள் இன்னும் இருக்கிறார்கள்.


Anantharaman Srinivasan
ஜூலை 12, 2024 22:55

கட்டிடடம் strong building week என்பது போல இந்த திட்டம். நமக்கு சரிபட்டு வராது. 40% கமிஷனின்றி எந்த வேலையும் இந்தியாவில் கிடையாது. மீதி 60% ல் மெடிரியல் ஊழியர்களின் சம்பளம் லாபம் பார்க்கணும். இது மற்ற contract போல கிடையாது. சிவகாசி பட்டாசு ஆலை போல் என்னிக்குமே Danger தான்.


karthik
ஜூலை 12, 2024 13:09

நம் நாட்டில் இந்த முறை எல்லாம் சரிப்பட்டு வராது ...இதெல்லாம் மிக தரமாக செய்யவேண்டிய பணி ...நம் நாட்டில் எந்த வேலையும் அதிக தரமாக செய்வது இல்லை யாரும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை