உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பவித் சிங் நாயர் டி - 20 குருநானக் கல்லுாரி சாம்பியன்

பவித் சிங் நாயர் டி - 20 குருநானக் கல்லுாரி சாம்பியன்

சென்னை:பவித் சிங் நாயர் டி - 20 கிரிக்கெட் போட்டியில், ஆண்களில் குருநானக் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.வேளச்சேரி, குருநானக் கல்லுாரி சார்பில், 10ம் ஆண்டு பவித் சிங் நாயர் நினைவு கோப்பைக்கான, அகில இந்திய 'டி - 20' கிரிக்கெட் போட்டி சென்னையில் பல்வேறு மைதானத்தில் நடந்தது. இதில், ஆண்கள் - 16, பெண்கள் - 10 என, மொத்தம் 26 அணிகள் பங்கேற்றன.நேற்று முன்தினம் வேளச்சேரி கல்லுாரி மைதானத்தில் நடந்த ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், குருநானக் 'ஏ' மற்றும் ஈரோடு கொங்கு கலை கல்லுாரி அணிகள் எதிர்கொண்டன. 'டாஸ்' வென்று முதலில் களமிறங்கிய குருநானக் அணி, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 198 ரன்களை அடித்தது. அணியின் வீரர்கள் டேவிட் குமார், 61, மேகநாத குமார், 55 ரன்களுக்கு அடித்தனர்.அடுத்து களமிறங்கிய கொங்கு கல்லுாரி அணி, 18.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 159 ரன்களை அடித்தது. இதனால், 39 ரன்கள வித்தியாசத்தில் குருநானக் ஏ அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை