உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா கடத்திய மூன்று பேருக்கு 10 ஆண்டு சிறை

கஞ்சா கடத்திய மூன்று பேருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை, சென்னை, ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை, ரோட்டரி நகர் சந்திப்பு அருகே, 2018 ல் ஆட்டோவில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சாவை போலீசார் மடக்கினர். ரோட்டரி நகரைச் சேர்ந்த விஜி, 30, திருவல்லிக்கேணி அயோத்தியா நகரைச் சேர்ந்த கீதன், 23, படாளத்தைச் சேர்ந்த கணேஷ், 34 ஆகியோரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன் வழக்கு நடந்தது. போலீசார் சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.சீனிவாசன் ஆஜரானார். மூன்று பேருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை