உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓய்வு நீதிபதிகள் மேற்பார்வையில் குடியிருப்புவாசிகளுக்கு மாற்று இடம்

ஓய்வு நீதிபதிகள் மேற்பார்வையில் குடியிருப்புவாசிகளுக்கு மாற்று இடம்

சென்னை, சென்னை சாலிகிராமத்தில், 'ஜெயின் வெஸ்ட் மின்ஸ்டர்' என்ற பெயரில், 2015ல் 17 மாடி கட்டடத்தில், 600க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டன. தரமற்ற பொருட்களால், இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது' என, வீடுகள் வாங்கிய உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர்.இந்த குடியிருப்பின் தரத்தை ஆய்வு செய்த, சென்னை ஐ.ஐ.டி., வல்லுனர் குழு, 'தரமற்ற பொருட்களால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மையில் பாதிப்பு உள்ளதால், கட்டடத்தை இடித்து, புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டலாம்' என பரிந்துரைத்தது.இந்நிலையில், பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கூறியதாவது:நீதிபதிகள், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை வெளியேற்றுதல், அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது போன்ற பணிகளை மேற்பார்வையிட, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா மற்றும் கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.மேலும், தற்போதுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து 5 கி.மீ., சுற்றளவில் மாற்று தங்குமிடம் வழங்கப்பட வேண்டும் அல்லது குடியிருப்பாளர்களே மாற்று இடத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை