உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மது அருந்த கோவில் உண்டியலில் பணம் திருட முயன்றவர் கைது

 மது அருந்த கோவில் உண்டியலில் பணம் திருட முயன்றவர் கைது

ஆவடி: மது அருந்த கோவில் உண்டியலில் பணம் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த கண்ணபாளையம், வி.ஜி.நகரில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை, ஆவடி போலீசார் ரோந்து சென்றபோது, சத்தம் கேட்டு கோவில் அருகே சென்று பார்த்தனர். அப்போது, போதை நபர் ஒருவர், கோவில் உண்டியலை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். விசாரணையில், ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்த சக்திவேல், 30, என்பதும், மது அருந்த பணம் இல்லாததால் உண்டியல் திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை