உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு உலக சிட்டு குருவிகள் தின விழிப்புணர்வு

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு உலக சிட்டு குருவிகள் தின விழிப்புணர்வு

திருவொற்றியூர்:திருவொற்றியூர், காலடிப்பேட்டை, மார்க்கெட் லேனில், சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது.

நீர் கிண்ணங்கள்

இப்பள்ளி மாணவர்களுக்கு, 'இன்றைய விதை நாளைய விருட்சம் - சமூக அறக்கட்டளை' சார்பில், உலக சிட்டுக் குருவிகள் தின விழிப்புணர்வு முகாம், நேற்று முன்தினம் நடந்தது.இதில், அறக்கட்டளை சார்பில் பள்ளி வளாகத்தில், இரண்டு கம்பங்களில் ஆறு தானிய கூடுகள் - நான்கு நீர் கிண்ணங்கள் அமைக்கப்பட்டன.விழாவில், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் பங்கேற்று, தானிய கூடுகள், நீர் கிண்ணங்களை பொருத்திய பின், மாணவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விழாவில் அவர் பேசியதாவது:பள்ளிக்கு, 1 கோடி ரூபாய் மதிப்பில், கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் நடக்கின்றன. மாணவர்கள் நல்ல முறையில், படித்து எங்களுக்கு கைமாறாக மதிப்பெண்கள் அதிகம் எடுத்துக்காட்ட வேண்டும். இன்றைய விதை நாளைய விருட்சம் - சமூக அறக்கட்டளை சார்பில், என் வீட்டருகேயும் தானிய கூடு மற்றும் நீர் கிண்ணங்கள் வைக்கப்பட்டுள்ளன. நான் பராமரித்து வருகிறேன்.

மொபைல் கோபுரங்கள்

பறவைகளை, நாம் கடவுளாக மதிக்கிறோம். மொபைல் போன் கோபுரங்களால் குருவிகள் அழிந்து வருகின்றன. எனவே, மொபைல் போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.வெயில் காலத்தில் மாணவர்கள், பறவைகளுக்கு தண்ணீர், தானியக்கூடுகள் வைத்து, உதவிட வேண்டும். மட்டுமின்றி, கால்நடைகளுக்கு உணவளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை