உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்கள் ஓட்டு; உங்கள் எதிர்காலம் விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

உங்கள் ஓட்டு; உங்கள் எதிர்காலம் விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

கோவை;தேர்தலில் ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கி, கோவை கலெக்டர் கிராந்திகுமார், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், தேர்தல் விழிப்புணர்வு பிரதிநிதி ஸ்வர்ணலதா ஆகியோர் பேசிய சிறப்பு வீடியோக்கள் நேற்று வெளியிடப்பட்டன.அதில், கலெக்டர் பேசியதாவது:கோவை மாவட்டம் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் முன்னோடியாக இருக்கிறது. அதேபோல், ஓட்டளிப்பதிலும் முன்னோடி மாவட்டமாக உருவாக, அனைவரின் ஒத்துழைப்பு தேவை. ஜாதி, மதம், மொழி, இன வேறுபாடுகள் இல்லாமல், 18 வயதான அனைத்து தரப்பினரும் ஓட்டளிக்க வேண்டும்.இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க கல்லுாரிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஓட்டளிப்பது அனைவரின் கடமை. உங்களின் ஓட்டு; உங்கள் எதிர்காலம். ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு, பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை