உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிரதமர் மோடியின் வாக்குறுதிகள்: விருதையில் பா.ஜ., துண்டு பிரசுரம்

பிரதமர் மோடியின் வாக்குறுதிகள்: விருதையில் பா.ஜ., துண்டு பிரசுரம்

விருத்தாசலம் : பிரதமர் மோடி வாக்குறுதிகளை தெரிவித்து, விருத்தாசலத்தில் பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார், துண்டு பிரசுரம் வழங்கி ஓட்டு சேகரித்தார்.கடலுார் தொகுதியில் பா.ஜ., கூட்டணி சார்பில், பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, பா.ஜ., கடலுார் மாவட்ட துணைத் தலைவர் கவுன்சிலர் செந்தில்குமார், பாலக்கரையில் நின்றிருந்த பயணிகள், வியாபாரிகளிடம் பிரதமர் மோடியின் வாக்குறுதிகளை தெரிவித்து மாம்பழம் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். தொடர்ந்து, பிரதமர் மோடியின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.பிறமொழி மாவட்ட தலைவர் சரவணன், ஒன்றிய தலைவர் வெங்கடேசன், ஓ.பி.சி., பிரிவு துணைத் தலைவர் செல்வராஜ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பரந்தாமன், நிர்வாகிகள் செல்வா, பாலமுருகன், குணசேகரன், பாலாஜி, ராமமூர்த்தி மற்றும் பா.ம.க., இளைஞரணி செயலாளர் ரமேஷ், ஊடக பிரிவு செயலாளர் தமிழரசன், குணா, பாலகுரு உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை