உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் திருமாவளவன் இறுதிகட்ட பிரசாரம்

சிதம்பரத்தில் திருமாவளவன் இறுதிகட்ட பிரசாரம்

சிதம்பரம் : சிதம்பரம் தொகுதியில், வி.சி., வேட்பாளர் திருமாவளவனுக்கு ஆதரவாக, அமைச்சர் பன்னீர்செல்வம், நகரமன்ற சேர்மன் செந்தில்குமார் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.சிதம்பரம் தொகுதி வி.சி., வேட்பாளர் திருமாவளவன் நேற்று தொகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். சிதம்பரம் மன்மதன் சாமி கோவிலில் இருந்து பிரசாராத்தை நேற்று துவக்கினர். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், சிதம்பரம் நகர்மன்ற சேர்மன் செந்தில்குமார் இருவரும், சிதம்பரம் நகரில் 33 வார்டுகளிலும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், திருமாவளவனுக்கு ஆதரவாக பானை சின்னத்தில் ஓட்டு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.அப்போது, சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் அப்புசந்திரசேகர், தி.மு.க., நிர்வாகிகள் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், இளங்கோ, தி.மு.க., கவுன்சிலர்கள் மணிகண்டன், சரவணன், மக்கள் அருள், வி.சி., துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ச்சுனா, மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செல்லப்பன், பால அறவாழி, மூ.மு..க., தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், ம.நே.மே.இ. தில்லை சீனு, காங்., மாநில செயலாளர் சித்தார்த்தன், நகர தலைவர் மக்கீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா, மா.கம்யூ., நகர செயலாளர் ராஜா, இந்திய கம்யூ., மாவட்டக்குழு சேகர், நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, த.வா,க., குமரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் உடன் சென்று ஓட்டு சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை