உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொத்தட்டையில் பரிசளிப்பு விழா

கொத்தட்டையில் பரிசளிப்பு விழா

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சியில் போகி விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சதீஷ்குமார், மண்டல அலுவலர் ஜோதி, சமூக நல அலுவலர் சசிகலா முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் முருகேசன் வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பேராசிரியர் ரங்கசாமி பரிசு வழங்கினார்.விழாவில், தலைமை ஆசிரியர்கள் முருகன், உஷாராணி, ஆசிரி யர்கள் கோமலவள்ளி, விஜயா தேவி, வார்டு உறுப்பினர் உமா, சுகாதார ஊக்குவிப்பாளர் ராமகிருஷ்ணன், சமூக ஆர்வலர் சதீஷ்குமார் பங்கேற்றனர்.மேற்பார்வையாளர் சரவணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை