| ADDED : ஜன 23, 2024 11:21 PM
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப், கேரி பேக், பிளாஸ்டிக் ஷீட் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது.இதன்காரணமாக அப்போதைய அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதித்தது.இதனால், பிளாஸ்டிக் பயன்பாடு கனிசமாக குறைந்தது. மேலும், இதன்காரணமாக, ஓட்டல்களில் வாழை இலைக்கு கிராக்கி ஏற்பட்டது.நாளடைவில், அதிகாரிகள் யாரும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் விற்பனை குறித்து கண்டுகொள்ளவில்லை. இதனால், பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை தற்போது அமோகமாக நடக்கிறது.மேலும், ஓட்டல்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் ஷீட் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, மாவட்டம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுத்து நிறுத்த மாவட்டம் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு தடுக்கப்படும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?