உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவேகானந்தர் பிறந்த நாள் விழா

விவேகானந்தர் பிறந்த நாள் விழா

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகர பா.ஜ., சார்பில், விவேகா னந்தர் பிறந்த நாள் மற்றும் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.தேசிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில், விவேகானந்தர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரது கருத்துக்கள் பற்றிய போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். தலைமையாசிரியர் விஜயபாபு, அறிவழகன், பா.ஜ., நகர தலைவர் வேலுமணி, ஆன்மிக பிரிவு தலைவர் ராஜசேகரன், நிர்வாகிகள் கிருபா, சவுந்தரராஜன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை