உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தானாகவே பூட்டிக்கொண்ட வீட்டின் கதவு காஸ் அடுப்பு எரிந்ததால் பரபரப்பு-பதற்றம்

தானாகவே பூட்டிக்கொண்ட வீட்டின் கதவு காஸ் அடுப்பு எரிந்ததால் பரபரப்பு-பதற்றம்

ஈரோடு: ஈரோடு, மாணிக்கம்பாளையம், இ.பி.பி.நகரில், ஒரு குடியிருப்பில் இரண்டாவது மாடியில் குடியிருப்பவர் ராஜ்குமார், 44; ஐ.டி.ஐ.,யில் பணிபுரிகிறார். நேற்று காலை மகளை பள்ளியில் விட சென்று விட்டார். சமைத்து கொண்டிருந்த மனைவி, வீட்டுக்கு வெளியே வந்து அக்கம்பக்கத்தினருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்புற கதவு தானாகவே மூடிகொண்டது. அதேசமயம் காஸ் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. அருகில் சிலிண்டரும் இருந்ததால், தீ விபத்து ஏற்படலாம் என அஞ்சிய ராஜ்குமாரின் மனைவி, ௧0:00 மணியளவில் ஈரோடு தீயணைப்பு துறையினரை அழைத்தார். விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்களாலும் திறக்க முடியவில்லை. இதனால் வீட்டின் பின்புறம் சென்று, ஏணி வழியே வீட்டுக்குள் குதித்தனர். காஸ் அடுப்பை அணைத்த பின் கசிவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டனர். பிறகு கதவின் லாக்கரை உடைத்து திறந்தனர். லாக்கர் பழுதாகி இருந்ததால் தானாகவே பூட்டி கொண்டதும் தெரிந்தது. இதனால் குடியிருப்பு பகுதியில், ௪௫ நிமிடம் பதற்றத்துடன் கூடிய பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை