உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கார்கள் நேருக்கு நேர் பயங்கர மோதல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

கார்கள் நேருக்கு நேர் பயங்கர மோதல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

புன்செய்புளியம்பட்டி:கோவை மாவட்டம், சிறுமுகை அடுத்த மோத்தேபாளையத்தைச் சேர்ந்தவர் முருகன், 40, கொசு வலை வியாபாரி.இவர் தன் மனைவி ரஞ்சிதா, 30, மகன் அபிஷேக், 8. மகள் நித்திஷா, 7, ஆகியோருடன் தனக்கு சொந்தமான, மாருதி 'ஆல்டோ' காரில், கரூர் சென்று மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் வந்து கொண்டிருந்த 'இனோவா' கார், நேருக்கு நேர் மோதியது. இதில், முருகன் குடும்பத்தினர் வந்த ஆல்டோ காரின் முகப்பு முற்றிலும் சேதமடைந்தது. அதில் பயணித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முருகன், மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த முருகன் மகள் நித்திஷா, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.எதிரே காரில் வந்த கல்லுாரி மாணவி உட்பட நான்கு மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். கல்லுாரி மாணவரான சேலத்தை சேர்ந்த சுஜித், 21, என்பவருக்கு சொந்தமான இனோவா காரில், 21 வயது பெண் உட்பட நண்பர்கள் நான்கு பேர் சென்றனர். அப்போது, அனைவரும் மதுபோதையில் இருந்ததாகவும், அதிவேகம் காரணமாக இந்த விபத்து நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை