உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கனி மார்க்கெட் வணிக வளாகம் எதிரே பஸ் நிறுத்தம் கட்ட அடிக்கல்

கனி மார்க்கெட் வணிக வளாகம் எதிரே பஸ் நிறுத்தம் கட்ட அடிக்கல்

ஈரோடு:ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை, ஏராளமான ஜவுளி கடைகள் உள்ளன.அப்பகுதியில் உள்ள கனிமார்க்கெட் வணிக வளாகத்தில், 200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். சமீபத்தில் கனிமார்க்கெட் வணிக வளாகம் முன்பிருந்த பஸ் நிறுத்தம் அகற்றப்பட்டது. இதனால் துணி எடுக்க வரும் மக்கள், மணிக்கூண்டு அல்லது பெரிய மாரியம்மன் கோவில் அருகேயுள்ள பஸ் நிறுத்தத்துக்கு சென்று பஸ் ஏற வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து கனிமார்க்கெட் அருகே ஏற்கெனவே இருந்தது போல பஸ் நிறுத்தம் அமைக்க, ஜவுளி வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.இந்நிலையில் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் சார்பில், கனி மார்க்கெட் வணிக வளாகத்தின் முன், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பஸ் நிறுத்தம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை