கோபி : கோபி அருகே பச்சைமலை முருகன் கோவில் வளாகத்தில் உள்ள, சிவகாமி அம்பாள், சமேத நடராஜருக்கு சித்திரை மாத திருவோண மகா அபி ேஷகம், 108 சங்காபி ேஷகம், அதிகாலை 4:00 முதல், 6:00 மணி வரை மகா ேஹாமம் நடந்தது.தேன், பசு நெய், பால், தயிர், திருமஞ்சன பொடி, சந்தனம், பன்னீர், திருநீறு உள்ளிட்ட பொருட்களால், அபி ேஷகம் நடந்தது. காலை 8:00 மணிக்கு நடந்த, 108 சங்காபி ேஷகம், தீபாராதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அதேபோல் மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியால், பச்சைமலையில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் நேற்று காலை, 8:30 முதல், மதியம் 12:00 மணி வரை, குருபகவானுக்கு கலச பூஜை, நவக்கிரஹ ஆவாஹனம் நடந்தது. மதியம் 12:00 முதல், 1:30 மணி வரை குருபகவானுக்கும், நவக்கிரஹ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபி ேஷகம், 108 சங்காபி ேஷகம், குருப்பெயர்ச்சி சிறப்பு பரிகார அர்ச்சனை என நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.மேலும் காலபைரவர் சன்னதியில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. பச்சைமலையில் சிவகாமி அம்பாள், சமேத நடராஜருக்கு சித்திரை மாத திருவோண மகா அபி ேஷகம், 108 சங்காபி ேஷ விழா, குருப்பெயர்ச்சி விழா, காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா என மூன்றும் ஒரே நாளில் நேற்று நடந்ததால், திரளான பக்தர்கள் குவிந்தனர்.