| ADDED : பிப் 02, 2024 04:09 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா தலைமை தாங்கினார். தாசில்தார்கள் பன்னீர்செல்வம், கோவிந்தராஜ், கமலம் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர்கள் மணிமாறன், மணிவேல் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் அருண்கென்னடி, சுப்ரமணியன், மோகன், மணி, கணேசன், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.இண்டேன் காஸ் நிறுவன மாவட்ட வணிக மேலாளர் சுந்தர், எரிவாயு முகவர்கள், பெட்ரோல் பங்க் முகவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், வெகுவாக உயர்ந்துள்ள காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும், மாவட்டம் முழுதும் பெட்ரோல் பங்க்குகளில் புகார் புத்தகங்களை அனைவருக்கும் தெரியும்படி வைக்கவேண்டும்.அனைத்து பங்க்குகளிலும், இலவச குடிநீர் வைக்கப்படுவதில்லை. புகார் அளிப்பதற்கான விபரங்களை தமிழில் வைக்க வேண்டும்.இந்த பிரச்னைகளை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.