உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் தொடரும் கடும் பனிப்பொழிவு எலுமிச்சை பழத்துக்கு விலை கிடைக்கல

கரூரில் தொடரும் கடும் பனிப்பொழிவு எலுமிச்சை பழத்துக்கு விலை கிடைக்கல

கரூர்: கரூர் மாவட்டத்தில், எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகளவில் இல்லை. இதனால், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, அய்யம்பாளையம் பட்டி, வீரன்பட்டி மற்றும் கர்நாடகா மாநிலம் பிஜப்பூர், ஆந்திரா மாநிலங்களில் இருந்து, கரூர் மார்கெட்டுக்கு எலுமிச்சை பழம் விற்பனைக்காக, கொண்டு வரப்படுகிறது.கடந்த மூன்று மாதங்களுக்கு முன், கிலோ எலுமிச்சை பழம், 100 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெய்த மழை காரணமாக, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்கெட்டுக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள் ளது. இதனால், ஒரு கிலோ எலுமிச்சை பழம், 50 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை மட்டும் தற்போது விற்பனையாகிறது.இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:கடந்த, இரண்டு மாத காலமாக கடும் பனிப் பொழிவு உள்ளது. காய்ச்சல், சளி, வறட்டு இருமல் காரணமாக, உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும், எலுமிச்சை பழத்துக்கு தேவை குறைந்து விட்டது. இதனால், விலையும் பல மடங்கும் குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றுள்ள நிலையில், கோடைகாலம் துவங்கினால், எலுமிச்சை பழத்துக்கு தேவை அதிகரிக்கும். அப்போது, விலை உயர வாய்ப்புண்டு.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை