உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் 19,354 பேருக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர்

மாவட்டத்தில் 19,354 பேருக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர்

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை, கலெக்டர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின், அவர் கூறியதாவது:மருத்துவ முகாம் மூலம் அனைத்து வகையான உடல் பரிசோ-தனை, 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சை, முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்-கான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள்,நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட-வர்கள், இதய நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலக்-காக கொண்டு முகாம் நடக்கிறது. இதுவரை, 7,364 ஆண்கள், 11,848 பெண்கள் என மொத்தம், 19,354 பேருக்கு மருத்துவ பரி-சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.தொடர்ந்து, காசநோயால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு ஊட்டச்-சத்து பெட்டகங்கள், 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்ட-கங்கள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்ட-கங்களை கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) செழியன், துணை இயக்-குனர் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை