உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எம்.பி., ராஜா வாகனத்தில் பறக்கும் படை சோதனை

எம்.பி., ராஜா வாகனத்தில் பறக்கும் படை சோதனை

கோத்தகிரி;நீலகிரி எம்.பி., ராஜா சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.நீலகிரி லோக்சபா தொகுதியில், எம்.பி., ராஜா, தி.மு.க., சார்பில், மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல் பணி மற்றும் வேட்பு மனு பரிசீலனைக்காக, ராஜா நேற்று ஊட்டிக்கு வந்திருந்தார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் பேசிய அவர், நேற்று மாலை, ஊட்டியில் இருந்து, கோத்தகிரி வழியாக, மேட்டுப்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவருடன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தி.மு.க., மாவட்ட செயலாளர் முபாரக் ஆகியோர் ஒரே காரில் உடன் சென்றனர். அப்போது, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை சோதனைச் சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் ராஜா சென்ற வாகனத்தை சோதனையிட்டனர்.வாகனத்தில் இருந்து மூவரும் இறங்கிய நிலையில் முழு சோதனைக்கு பின், வாகனத்தில் ஏறி மூவரும் மேட்டுப்பாளையம் புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை