உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா

ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா

தாரமங்கலம், தாரமங்கலம் தபால் அலுவலகம் அருகே உள்ள, ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.கடந்த 24ல் முகூர்த்தகால், கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு இரண்டாம் கால யாகவேள்வி துவங்கி, நாடி சந்தானம், பூர்ணாஹுதி செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜை செய்த புனிதநீரை, சிவாச்சாரியார்கள் எடுத்து வந்து, 6:50 மணிக்கு ராஜகணபதி மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். சுவாமிக்கு பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை