உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலரில் பதுக்கிய ரூ.10 லட்சம்; தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்  

டூவீலரில் பதுக்கிய ரூ.10 லட்சம்; தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்  

சிவகங்கை: சிவகங்கை தொகுதி பறக்கும் படை 3 வது பிரிவு தாசில்தார் மகாதேவன் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ., சுரேஷ் கண்ணன், போலீஸ் ஆனந்தகுமார் ஆகியோர் நாமனுார் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக டூவீலரில் மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் உட்பட இருவர் வந்தனர். சோதனை செய்தபோது, டூவீலர் கார்பரேட் பெட்டிக்குள் ரூ.10 லட்சத்தை மறைத்து வைத்துள்ளனர். அதை பறிமுதல் செய்து விசாரித்ததில், உரிய ஆவணமின்றி எடுத்து சென்றது தெரிந்தது. இது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பணத்தை சிவகங்கை கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை