உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சின்னம் வரைவதில் முந்திய பா.ஜ.,

சின்னம் வரைவதில் முந்திய பா.ஜ.,

சிங்கம்புணரி: தமிழகத்தில் கூட்டணி இறுதி செய்யப்படும் முன்பே சிவகங்கையில் பா.ஜ., வினர் சின்னத்தை வரையத் தொடங்கியதால்அங்கு அக்கட்சியே போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் ஏ.சி.சண்முகம், ஜி. கே வாசன், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில் மேலும் சிலரிடம் பேச்சு நடக்கிறது. எந்த தொகுதி யாருக்கு என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் சிவகங்கை லோக்சபா தொகுதியில் பா.ஜ.,வினர் சின்னத்தை வரையத் தொடங்கியுள்ளனர்.இத்தொகுதியில் பா.ஜ., வேட்பாளரே நிறுத்தப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போதும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இத்தொகுதியில் பா.ஜ., வினர் தங்கள் சின்னத்தை வரைந்தனர், பிறகு அக்கட்சியின் வேட்பாளராக எச்.ராஜா அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை