உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில்களில் ராமநவமி சிறப்பு பூஜை

கோயில்களில் ராமநவமி சிறப்பு பூஜை

பெரியகுளம்: பெரியகுளம் கோயில்களில் ராமநவமி விழா சிறப்பு பூஜை நடந்தது.லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ராமர், சீதை, லட்சுமணர் ஆஞ்சநேயர் பஜனை பாடல்கள் அர்ச்சகர் ராமானுஜர் தலைமையில் பாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியகுளம் பாம்பாற்று ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் ஆஞ்சநேயர், புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சியளித்தார். உற்ஸவர் ஆஞ்சநேயர், ராமருக்கு பொற்குடை தூக்கி செல்லும் அலங்காரத்தில் காட்சியளித்தார். வடகரை கோதண்ட ராமர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ராமநவமியை முன்னிட்டு ஏப். 9 முதல் நேற்று வரை ஹரேராம நாம கீர்த்தனம் 108 மணி நேரம் நடந்தது. கிருஷ்ணர், ராதை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.பக்தர்கள் எழுதிய ஏராளமான ராம நாமத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.--போடி : ராம நவமியை முன்னிட்டு, போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் லட்சுமணர், சீதையுடன், ராமருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ராமரின் தரிசனம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை