உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு மருத்துவமனை பாத்ரூமில் வழுக்கி விழுந்த பணியாளர் பலி

அரசு மருத்துவமனை பாத்ரூமில் வழுக்கி விழுந்த பணியாளர் பலி

பெரியகுளம்: ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராம்கி 28. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆப்ரேஷன் தியேட்டரில் தற்காலிகடெக்னீசியனாக பணிபுரிந்தார். சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனை பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்கரை எஸ்.ஐ., அனுசுயா விசாரணை செய்து வருகிறார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை வார்டுகளில் பாத்ரூம்களில் தூய்மை இல்லாமல் உள்ளது. மூத்த உள்நோயாளிகள் பாத்ரூமில் வழுக்கி விழுவது இங்கு வாடிக்கையாக உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி