| ADDED : ஜன 21, 2024 05:14 AM
பெரியகுளம்: தேவதானப்பட்டி அருகே சிறுமியை திருமணம் செய்த தாய்மாமன் உட்பட நான்கு பேர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.போடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவரின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டனர். அண்ணன், தம்பியுடன் வசித்தார். அதே ஊரைச் சேர்ந்த இவரது தாய்மாமன் ராஜ்குமார் 33. திருமணமாகி விவகாரத்தானவர்.ராஜ்குமார் பெற்றோர்கள் அதிகாரி, சாந்தி மற்றும் மைனர் பெண் உறவினர் மீனா ஆகியோர் ஒன்று சேர்ந்து, தேவதானப்பட்டி அருகே கோயிலில் கடந்தாண்டு ராஜ்குமாருக்கும், 17 வயது சிறுமிக்கும் திருமணம் முடித்து வைத்தனர். தற்போது சிறுமி நான்கு மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து தேனி குழந்தை நல குழுமத்திற்கு புகார் சென்றது. தொடர் விசாரணையில் சிறுமி புகாரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னமயில், ராஜ்குமார் உட்பட நான்கு பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தார்.