உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசுப்பணி அசாத்தியம் அல்ல; அசத்தும் மகளிர்

அரசுப்பணி அசாத்தியம் அல்ல; அசத்தும் மகளிர்

அரசு வேலைக்கு இன்றைய இளைஞர்கள் பலர் ஆசைப்படுகின்றனர். பயிற்சியும், முயற்சியும் இருந்தால், போட்டி தேர்வில் சாதித்து உயர் அரசுப்பதவிகளையும் இளம் வயதிலேயே பெற முடியும். இதற்கு, திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண்கள் சாட்சியாக இருக்கின்றனர்.விவசாயி மகள்ஏற்கனவே, குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்து சுபாஷினி, குரூப் 1 தேர்வெழுதி, கூட்டுறவு துறையில் துணைப்பதிவாளர் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார்.''போட்டி தேர்வை எதிர்கொள்வதென்பது, சவாலான பணியல்ல; நான் விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் தான்; பெற்றோர் விவசாயம் தான் பார்க்கின்றனர். நான் படிக்கவும், போட்டி தேர்வுக்கு தயாராகவும் அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். ஓராண்டு, கஷ்டப்பட்டு படித்தேன்; அரசுப்பணி சாத்தியமானது,'' என வெற்றியின் ரகசியம் சொன்னார் சுபாஷினி.நம்பிக்கையே துணைகுரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, வேளாண்மை அலுவலராக பணியாற்றி வரும் நித்யா 26, குரூப் 1 தேர்வெழுதி, சப்-கலெக்டராக பொறுப்பேற்க இருக்கிறார். ''கல்லுாரி படிக்கும் போதே அரசுப்பணி மீது ஆர்வம் இருந்தது; அப்போதில் இருந்தே போட்டி தேர்வுக்கு தயாராக துவங்கினேன்; ஒரு முறை தோற்றாலும், அடுத்த முறை வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும்; போட்டி தேர்வு எளிதாகும். குடும்ப சூழலும் நம் முயற்சிக்கு சாதகமாக அமைய வேண்டும். ஒருமுறை போட்டி தேர்வை எதிர்கொண்டாலே தைரியம் வந்துவிடும்'' என நம்பிக்கை தருகிறார், நித்யா.உழைப்பே உயர்வுதிருப்பூரில் பல் டாக்டராக பணியாற்றி வந்த தாரணி, 4 ஆண்டாக ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி, 4 முறை தேர்வெழுதி, நான்காவது முறை, தேர்ச்சி பெற்றிருக்கிறார். ''அர்ப்பணிப்பு உணர்வுடன் படிக்க வேண்டும்; அரசுப்பணி பெறுவதும் கடின உழைப்பின் வழியாக கிடைப்பது தான்; சில மாத கடின உழைப்பு; ஆயுள் முழுக்க நிம்மதி என்ற நம்பிக்கை வந்தாலே போதும்; அதற்கான முயற்சிக்கு உத்வேகம் கிடைக்கும்,'' என்றார் தாரணி.பயிற்சியே பிரதானம்உடுமலையை சேர்ந்த இந்திராபிரியதர்ஷினி, வேளாண்மை அலுவலராக பணிபுரிந்த நிலையில், குரூப் 1 தேர்வெழுதி, வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். ''போட்டி தேர்வுக்கு முழு ஈடுபாடுடன் தயாராக வேண்டும்; நிறைய பயிற்சி செய்ய வேண்டும்; வெற்றி கிடைக்கும்,'' என, ஒரே வரியில் தன்னம்பிக்கை தருகிறார்.--18-ம் தேதி ரெகுலர் 11ம் பக்கம்தாரணி-----26ம் தேதி 3ம் பக்க படங்கள்நித்யா, சுபாஷினி, இந்திரா பிரியதர்ஷினி

'தியாக' மனநிலை; அர்ப்பணிப்பு உணர்வு

போட்டி தேர்வுகளில், பெண்களே அதிகளவில் சாதிக்கின்றனர்; அதற்கான காரணம் என்ன என்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷிடம் கேட்டோம்; அவர் கூறியதாவது:கல்லுாரி இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவியரிடம், போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். கல்லுாரி முடித்த பின், குடும்ப சூழ்நிலையால் தனியார் வேலைக்கு செல்லும் மாணவ, மாணவியர் ஏராளம்; அதற்கேற்ப, திருப்பூரில் தனியார் வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்கிறது.பொருளாதார நிலையில் வசதியாக இருப்பவர்கள், எப்படியாவது அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என அதீத ஆர்வம் கொண்டவர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக, போட்டி தேர்வு எதிர்கொள்ள இலவசமாக பயிற்சி வழங்குகிறோம்; திருப்பூர் கலெக்டர் அலுவலகம், உடுமலைபேட்டையில் பயிற்சி வழங்கப்படுகிறது.பெண்கள் ஆர்வம்போட்டி தேர்வெழுதுவதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதாவது, தேர்வெழுதுவோரில், 70 சதவீதம் பேர் பெண்களாக தான் இருக்கின்றனர்; 30 சதவீதம் தான் ஆண்கள். போட்டி தேர்வை எதிர்கொள்ள, குறைந்தது, ஓராண்டு காலத்துக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் படிக்க வேண்டும்; படிப்புக்காக அந்த காலகட்டத்தை தியாகம் செய்ய வேண்டும்; இந்த சூழலை பெண்கள் ஏற்று, அர்ப்பணிப்பு உணர்வுடன் படிக்கின்றனர். ஆனால், ஆண்களிடம் அத்தகைய மனநிலை குறைவு.'இப்போதைக்கு வேலைக்கு செல்லலாம்; 2 வருடம் கழித்து அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம்' என்ற மனநிலையை பல ஆண்களிடம் பார்க்க முடிகிறது.தனியார் நிறுவனங்கள்கடந்த நிதியாண்டில், 700 பேருக்கு பயிற்சி வழங்கியுள்ளோம்; 50 பேர், பல்வேறு அரசு துறைகளில் இணைந்துள்ளனர். கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில், சிறப்பான பயிற்சி கட்டமைப்புடன் தனியார் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன; அவை, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுவதால், பலரும் தனியார் பயிற்சி மையங்களுக்கு சென்றும் பயிற்சி பெறுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை