உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பூர்;திருமுருகன்பூண்டி பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஊர்வலம் நடந்தது.திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியை (பொறுப்பு) லாவண்யா கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம், பள்ளியிலிருந்து துவங்கி நுாலகம் வழியாக பழைய போலீஸ் ஸ்டேஷன் வீதி, சன்னதி வீதி, அண்ணா வீதி வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில், நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பை சேர்ந்த, 90 மாணவ, மாணவியர், மாணவர்கள் சேர்க்கை குறித்த பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு வந்தனர். ஊர்வலத்தில் ஆசிரியர்கள் கவுரி நிர்மலா, செல்வி, சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை