உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடைபாதையை தாண்டி ரோடு வரை ஆக்கிரமிப்பு

நடைபாதையை தாண்டி ரோடு வரை ஆக்கிரமிப்பு

திருப்பூர்:திருப்பூர் நகரப் பகுதியில் தேசிய, மாநில நெடுஞ்சாலை மட்டுமின்றி மாநகராட்சி ரோடுகளும் அதிகளவில் உள்ளது. பெருமளவு பொதுப் போக்குவரத்து வாகனங்கள் சென்று வரும் பிரதான ரோடுகள் எந்நேரமும் கடுமையான வாகன நெரிசலுடன் இருப்பது இயல்பாகவே காணப்படுகிறது.இது தவிர தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அமைந்த பகுதிகள் மற்றும் அதற்கான ரோடுகள் அதிகளவில் உள்ளது. இது போன்ற ரோடுகளில் சில பகுதிகளில் கான்கிரீட் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தனியார் சொந்த வாகனங்கள், சிறிய அளவிலான சரக்கு வாகனங்கள் ஆகியன பெருமளவு பயன்படுத்தி வருகின்றன.இந்த ரோடுகளில் ரோட்டோர கடைகளின் ஆக்கிரமிப்பு பல பகுதிகளில் உள்ளது. இதில் ஒரு படி மேலே போய், அரிசி கடை வீதியில் ஆக்கிரமிப்பு காணப்படுகிறது. நடைமேடை மீது பொருட்களைப் பரப்பி வைத்து, வியாபாரமும், ஆக்கிரமிப்பும் செய்யும் வியாபாரிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இது தற்போது, நடைமேடையை கடந்து ரோடு வரை நீண்டு வருகிறது.ரோட்டின் மீது கடை விளம்பர பலகைகள், விற்பனை பொருட்கள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் வழக்கமாகவே கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் அரிசி கடைவீதி இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் மேலும் குறுகலாகி வாகனப் போக்குவரத்துக்கு பெரும் இடையூறை ஏற்படுத்துவதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை