உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜெம் இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா

ஜெம் இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா

திருப்பூர்;பல்லடத்தில் உள்ள ஜெம் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 12ம் ஆண்டு விழா நடைபெற்றது.விழாவில், பட்டிமன்ற பேச்சாளரும், பேராசிரியருமான ஞானசம்பந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தமிழ் மொழியின் சிறப்பு, உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.பள்ளி முதல்வர், 2023 - 24 கல்வியாண்டில் மாணவர்களின் தேர்ச்சி, விளையாட்டு மன்ற செயல்பாடுகள் குறித்து பேசினார். கல்வி மற்றும் அனைத்து துறைகளிலும் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.மாணவர்கள், கீபோர்டு இசைத்தும், ஸ்கேட்டிங், யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அசத்தினர். பள்ளி துணை தலைவர், பொருளாளர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை