உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில் நிலத்தை ஒப்படைக்காவிடில் சட்டரீதியான நடவடிக்கை பாயும்

கோவில் நிலத்தை ஒப்படைக்காவிடில் சட்டரீதியான நடவடிக்கை பாயும்

பல்லடம்:'தாங்களாகவே முன்வந்து கோவில் நிலத்தை ஒப்படைக்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை பாயும்,' என, பல்லடத்தில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எச்சரித்துள்ளார்.பல்லடம் பொன்காளியம்மன் கோவிலில் நடந்த அறங்காவலர் குழு தேர்வு நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம் கூறியதாவது:விநாயகர், பாலதண்டாயுதபாணி கோவில், அருளானந்த ஈஸ்வரர் மற்றும் மாகாளியம்மன் கோவில்கள் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளன. சர்வ சாதாரணமாக அறங்காவலர் குழுவை நியமனம் செய்ய முடியாது.பல்வேறு சட்ட விதிமுறைகளை பின்பற்றிதான் அறங்காவலர் குழுவை நிர்ணயிக்க முடியும். அற வழியில் கோவிலை பாதுகாப்பவரே அறங்காவலராக இருக்க முடியும். ஆண்டவனுக்கு அடிபணிந்து கோவிலை சிறப்பான முறையில் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்பவரே அறங்காவலர். பல்லடம் மாகாளியம்மன் கோவில் பள்ளமான இடத்தில் உள்ளது.கோவில் இருப்பதே பக்தர்களுக்கு தெரிவதில்லை. கடைகள் நடத்துவதை மட்டுமே கவனத்தில் வைக்காமல், கோவில் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனம் வேண்டும். பழமையான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி விட்டால், பல்லடம் தானாக வளர்ச்சி பெறும். சட்டரீதியாக ஆக்கிரமிப்புகளை எடுக்க முடியும். மனதளவில் சிலருக்கு இதனால் சங்கடம் ஏற்படும். கோவில் சொத்துக்களை கண்டிப்பாக மீட்காமல் விடமாட்டேன்.அதிகாரிகளிடமும் இது குறித்து வலியுறுத்தி வருகிறேன். மாகாளியம்மன், அருளானந்த ஈஸ்வரர் கோவில் நிலங்கள் மீட்கப்பட வேண்டி உள்ளது. தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ளாவிட்டால், நிச்சயம் கடும் நடவடிக்கை இருக்கும். நான் இந்த பொறுப்பில் இருக்கும் வரை இது நடக்கும். இல்லையெனில், இந்த பொறுப்பே எனக்கு தேவையில்லை.கடவுளுக்கு சேவை செய்யத்தான் நாம் அனைவரும் உள்ளோம். கோவில்கள் திருப்பணிக்காக கோடிக்கணக்கில் செலவு செய்ய பலரும் தயாராக உள்ளனர். எனவே, பல்லடத்தில் உள்ள பழமையான கோவில்கள் கும்பாபிஷேகம் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை