| ADDED : மார் 17, 2024 11:47 PM
உடுமலை:உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு, ரோட்டரி கிளப், லிட்டில் ஏஞ்செல்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆட்டுமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில், மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.வக்கீல்கள் மகேஷ்வரன், சத்யவாணி, ரோட்டரி கிளப் தலைவர் கணேசன், இன்னர் வீல் கிளப் தலைவர் பொன்மணி, வட்ட சட்டப்பணிகள் குழு பணியாளர்கள், லிட்டில் ஏஞ்செல்ஸ் அறக்கட்டளை தன்னார்வலர்கள் ராஜேஸ்வரி, பச்சைராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முகாமில், சட்டபணிகளின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள், இலவச சட்ட உதவி பெறுவதற்கான வழிகள், அரசின் நலத்திட்ட உதவிகள், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினர். மேலும், மலைவாழ் மக்கள் குடியில் வசிக்கும், 32 குடும்பங்களுக்கும், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.