உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊட்டசத்து உணவு முறை சிறப்பு கண்காட்சி

ஊட்டசத்து உணவு முறை சிறப்பு கண்காட்சி

உடுமலை;உடுமலை வட்டாரத்தில் 'போஷன் பக்வாடா' திட்டத்தின் கீழ், கல்லுாரியில் சிறப்பு கண்காட்சி நடந்தது.உடுமலை வட்டாரத்தில் 'போஷன் பக்வாடா' திட்டத்தின் கீழ், அங்கன்வாடிகளில் மார்ச் 9 முதல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.நடப்பாண்டில் சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம், இந்த உணவுகள் மூலமாக வளர் இளம் பெண்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை மேம்படுத்துவது குறித்து சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கிறது.இதன் தொடர்ச்சியாக, உடுமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில், வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உடுமலை குழந்தைகள் வளர்ச்சி திட்ட பொறுப்பு அலுவலர் தீபா தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் சத்யப்ரியா, அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்தினர்.ஊட்டச்சத்து குறித்து, அங்கன்வாடி பணியாளர்கள் கும்மியடித்து உணவு முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.இதைத்தொடர்ந்து கண்காட்சி நடந்தது. மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்தை மேம்படுத்துவது குறித்து குறித்து, உறுதிமொழி எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை