உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாலுகா ஆபீஸ் சீரமைப்பு பணி; கண்துடைப்புக்கு நடப்பதாக புகார்

தாலுகா ஆபீஸ் சீரமைப்பு பணி; கண்துடைப்புக்கு நடப்பதாக புகார்

பல்லடம்;பல்லடம் தாலுகா அலுவலக சீரமைப்பு பணி, பெயரளவுக்கு மட்டுமே நடப்பதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து திருப்பூர் தியாகி குமரன் தொழிற்சங்க நிர்வாகி ராஜசேகர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள புகார் மனு:தமிழக அரசு சார்பில் நடக்கும் எந்த திட்டப் பணிகளாக இருந்தாலும், அது மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் மேற்கொள்ளப்படுகிறது. இதனை வீணாக்குவதை ஏற்றுக்கொள்ள இயலாது. அவ்வகையில், பல்லடம் தாலுகா அலுவலகம், பல ஆண்டுக்கு பின் மராமத்து பணிகள் நடந்து வருகின்றன.கட்டடத்தின் சன்ேஷடு உட்பட பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் விட்டும் சேதமடைந்தும் காணப்படுகின்றன. இவ்வாறான இடங்களில், சேதமடைந்த பகுதியை சுற்றிலும் சுவற்றை கொத்தி எடுத்து, அதன் பின்னரே சிமென்ட் பூச்சு பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், பெயரளவுக்கு மட்டுமே சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.அரசு அலுவலக கட்டடம் என்று எண்ணத்துடன், வேலைகள் சரிவர நடக்கின்றதா என்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. இதனால், மராமத்து பணிகள் என்ற பெயரில், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக, மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரியிடம் நான்கு முறை மொபைல் போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை