உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில் ஆண்டு விழா; பக்தர்கள் வழிபாடு

கோவில் ஆண்டு விழா; பக்தர்கள் வழிபாடு

உடுமலை;உடுமலை தில்லை நகரில், ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.விழாவில், காலை, 5:00 மணிக்கு ஐங்கரன் வேள்வியும், தொடர்ந்து சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜையும் நடந்தது. இதையொட்டி, சுவாமி சிவபெருமான், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தில்லை நகர் பொதுமக்கள், விழாக்குழுவினர், ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை