உள்ளூர் செய்திகள்

பென்ஷனர் தின விழா 

விழுப்புரம்: விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பு சார்பில் பென்ஷனர் தின விழா நடந்தது.விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளியில் நடந்த விழாவிற்கு, வட்டார தலைவர் கோபால்சாமி தலைமை தாங்கினார். பொருளாளர் ராமனுஜம் வரவேற்றார். செயலாளர் ராஜமுத்து ஆண்டறிக்கை வாசித்தார். மாநில துணைத் தலைவர் ராமு சிதம்பரம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் துரைக்கண்ணு, மாவட்ட தலைவர் சிவகுருநாதன், செயலாளர் விவேகானந்தன் சிறப்புரையாற்றினர்.விழாவில், 70, 75, 80 வயது நிறைவடைந்த உறுப்பினர்களுக்கு நினைவு பரிசளித்து கவுரவிக்கப்பட்டனர்.துணைத் தலைவர்கள் சரவணபவன், ராஜகோபால், மாநில பிரதிநிதிகள் ஜோதி, பெருமாள், வட்டார நிர்வாகிகள் கண்ணன், சுப்ரமணியன், சுப்பராயலு, சொக்கலிங்கம், பலராமன், பாலசுப்ரமணியன் வாழ்த்திப் பேசினர்.இஸ்மாயில் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை