உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சர்வதேச அறிவியல் திருவிழா விருதுநகர் ஆசிரியர்கள் பங்கேற்பு

சர்வதேச அறிவியல் திருவிழா விருதுநகர் ஆசிரியர்கள் பங்கேற்பு

காரியாபட்டி : இந்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத் துறை என்.ஐ.எப்., இணைந்து ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடத்திய 9வது சர்வதேச அறிவியல் திருவிழாவில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து மல்லாங்கிணர்,பந்தல்குடி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஜன. 17 முதல் 20 வரை ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த விழாவில் 17 விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய அளவில் அறிவியல் ஆசிரியர்களுக்கு எளிய அறிவியல் உபகரணங்களை உருவாக்கவும், என்.இ.பி., 2020 அடிப்படையில் கற்றல், கற்பித்தல் முறை, ஒருங்கிணைந்த மதிப்பீட்டு முறை பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது.கென்யா, லாவோஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளின் கல்வியாளர்கள், ஐ.ஐ.டி., என்.சி.இ.ஆர். டி., கருத்தாளர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்திய அளவில் 150 ஆசிரியர்களில் 16 ஆசிரியர்கள் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டனர்.அதில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர் ராம்குமார், பந்தல்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜெயபால் கலந்து கொண்டனர். கலெக்டர் ஜெயசீலன், சி.இ.ஓ., வளர்மதி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை