| ADDED : ஜன 14, 2024 03:57 AM
புதுச்சேரி : மாகியில் லாட்ஜில் கணவருடன் தங்கிய பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த ஊழியரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரளா மாநிலம், சொர்ணாவூரைச் சேர்ந்த ஜோசியம் பார்க்கும் தம்பதி கடந்த 10ம் தேதி மாகி ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.மறுநாள் 11ம் தேதி காலையில் கணவர் மட்டும் வாக்கிங் செல்ல வெளியே சென்றார். 51 வயது பெண் அறையில் தனியாக துாங்கி கொண்டிருந்தார்.அப்போது, அறைக்குள் புகுந்த மர்ம நபர், துாங்கி கொண்டிருந்த பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். நடைபயிற்சி முடித்து திரும்பிய கணவரிடம் நடந்த கொடூரத்தை அப்பெண் கூறி அழுதார். தம்பதி இருவரும் மாகி போலீசில் புகார் அளித்தனர்.இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து லாட்ஜில் பொருத்திய சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, லாட்ஜில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பெண் தங்கியிருந்த அறைக்குள் சென்று வருவது தெரியவந்தது. அதை தொடர்ந்து லாட்ஜ் ஊழியரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.