உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.ஐ.,யிடம் தகராறு ரவுடிகள் இருவர் கைது

எஸ்.ஐ.,யிடம் தகராறு ரவுடிகள் இருவர் கைது

ஓட்டேரி, புளியந்தோப்பு பவானி அம்மன் கோவில் எதிரே ரவுடிகள் இருவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டிருந்தனர். தகவல் கிடைத்து, ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கருப்பையா அங்கு சென்று அவர்களிடம் விசாரித்தார். விசாரணையில் அவர்கள், புளியந்தோப்பை சேர்ந்த 'வால் குரங்கு' என்கிற பிரசாந்த், 28, வியாசர்பாடியை சேர்ந்த ஸ்ரீதர், 45, என்பது தெரியவந்தது. ஆனால், எஸ்.ஐ., கருப்பையாவின் பைக்கை எட்டி உதைத்து கீழே தள்ளி, ரவுடிகள் தகராறு செய்தனர். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, போதை வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை