உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிபோதை கணவனுக்கு மனைவி கொதிநீர் அபிஷேகம்

குடிபோதை கணவனுக்கு மனைவி கொதிநீர் அபிஷேகம்

பெரும்பாக்கம், மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 66. இவரது மனைவி மலர்க்கொடி, 55. ஆறுமுகம் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால், இருவருக்கும் வாய்த் தகராறு, கைகலப்பு நடந்துள்ளது.நேற்று முன்தினம் இரவும், குடி போதையில் வீட்டுக்கு வந்த ஆறுமுகத்தை, மனைவி கண்டித்துள்ளார். பதிலுக்கு ஆறுமுகம் மனைவியை திட்டி உள்ளார். ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த மனைவி, அடுப்பறைக்குள் சென்று ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து, ஆறுமுகத்தின் மீது ஊற்றி உள்ளார்.ஆறுமுகம் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தார், அவரை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆறுமுகம் சேர்க்கப்பட்டார்.மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின்படி, பெரும்பாக்கம் போலீசார் ஆறுமுகத்தின் மனைவி மலர்க்கொடியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை