| ADDED : ஜன 26, 2024 12:45 AM
வளசரவாக்கம், வளசரவாக்கம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டராமன், 37; கார் ஓட்டுனர். இவரது மனைவி நிவேதா, 34. தம்பதியின் 3 வயது குழந்தை மகிழினி.நேற்று முன்தினம் மகிழினிக்கு, திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.நேற்று காலை, சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்ததால், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், வரும் 29ம் தேதி அதற்கான முடிவு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவு கிடைத்த பிறகே, குழந்தை என்ன காய்ச்சலில் இறந்தது என தெரியவரும்.