உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வடலூர் வார சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வடலூர் வார சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வடலுார், : வடலுார் வார சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.கடலுார் மாவட்டம், வடலுாரில் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வரும் வார சந்தையில் சுற்று வட்டார விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.நேற்று நடந்த சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வரத்து அதிகரித்தது. ஆடுகள் வாங்க கடலுார் மாவட்ட வியாபாரிகள் மட்டுமன்றி, விழுப்புரம், பெரம்பலுார், அரியலுார் மாவட்ட வியாபாரிகளும் அதிகளவில் வந்தனர். இதனால், ஆடுகளின் விலை கணிசமாக உயர்ந்தது. ஒரு ஆடு ரூ.4,000 முதல் 20 ஆயிரம் வரை விலை போனது. நேற்றைய சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை