உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இயற்கை வேளாண் இடுபொருள் தயாரித்தல் குறித்து பயிற்சி

இயற்கை வேளாண் இடுபொருள் தயாரித்தல் குறித்து பயிற்சி

ஈரோடு, பவானி வட்டாரத்தில், வேளாண் துறை சார்பில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில், இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி சின்னபுலியூர் கிராமத்தில் நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் கனிமொழி தலைமை வகித்தார். விவசாயி பொன்னுசாமி, இயற்கை வேளாண் இடுபொருட்களான பஞ்சகாவ்யா, அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், மீன் அமிலம், 3டீ கரைசல் என தயாரிக்கும் முறைகள் பற்றியும், பூச்சி, களை மேலாண்மை முறைகள் குறித்தும் விளக்கினார்.இயற்கை விவசாயி ஜெகதாம்மாள், இயற்கை வேளாண்மை செய்வதற்கான வழிமுறைகள், பாரம்பரிய நெல் ரக சாகுபடி முறைகள், பசுந்தாள் பயிர்களின் பயன்பாடு பற்றி பேசினார்.வேளாண் உதவி அலுவலர் மோனிசா, மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் கங்கா, மணிகண்டன், பூங்கோதை ஆகியோர் இ-நாம், இ-வாடகை, உயிர் உரங்கள் பற்றி விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை