உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 75வது குடியரசு தின விழா: தேசியக் கொடி ஏற்றி கலெக்டர் மரியாதை

75வது குடியரசு தின விழா: தேசியக் கொடி ஏற்றி கலெக்டர் மரியாதை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று, 75வது குடியரசு தினவிழாவையொட்டி கலெக்டர் சரயு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். எஸ்.பி., தங்கதுரை முன்னிலை வகித்தார். தொடர்ந்து கலெக்டர், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும், டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, சிப்காட் தனி டி.ஆர்.ஓ., பவந்தி, சமூகபாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு சிறப்பு விருதுகளும், 46 போலீசாருக்கு பதக்கங்களும், சிறப்பாக பணியாற்றிய, 5 போலீசாருக்கு விருதுகளும், 186 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில், 27 பயனாளிகளுக்கு, 59.10 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலெக்டரின் நேர்முக உதவியாளர் புஷ்பா, ஏ.டி.எஸ்.பி.,க்கள் சங்கு, விவேகானந்தன், வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன், சி.இ.ஓ., மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.*கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சப்கலெக்டர் அலுவலகத்தில், குடியரசு தினவிழாவையொட்டி, சப்கலெக்டர் பிரியங்கா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் சத்யா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அதில் பங்கேற்ற மாணவியருக்கு மேயர் சத்யா பரிசு வழங்கினார். மாநகராட்சி கமிஷனர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, செயற்பொறியாளர் ராஜாராம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.* தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில், போலீஸ், என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதை, மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் எஸ்.பி., ஸ்டீபன்ஜேசுபாதம் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். சிறந்த தாலுகா, பி.டி.ஓ., ஆபிஸ், அரசு மருத்துவமணை, அரசு பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், பஞ்சாயத்து உள்ளிட்டவைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.* அரூர் டவுன் பஞ்., அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதே போல், அரூர் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போலீஸ் ஸ்டேஷன், அரசு கல்லுாரி, அனைத்து அரசு பள்ளிகள், டவுன் பஞ்., அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் மற்றும் மொரப்பூர், கம்பைநல்லுார் சுற்றுவட்டாரத்தில் குடியரசு தின விழா விமர்சையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை