உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கமிஷனர், பொறியாளர் இன்றி கூடலுாரில் வளர்ச்சிப் பணி பாதிப்பு

கமிஷனர், பொறியாளர் இன்றி கூடலுாரில் வளர்ச்சிப் பணி பாதிப்பு

கூடலுார் : கூடலுார் நகராட்சியில் கமிஷனர், நகராட்சி பொறியாளர் இன்றி பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கேரள எல்லையில் உள்ளதால் காய்கறி, மளிகை உள்ளிட்ட பல பொருட்கள் வாங்க கேரள மக்கள் அதிகம் வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த கூடலுாரில் கடந்த சில நாட்களாக வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி பொறியாளர் மாறுதலாகி சென்று பல மாதங்களாகியும் இதுவரை நிரந்தர பொறியாளர் நியமிக்காமல் சின்னமனூரை சேர்ந்த பொறியாளர் கூடுதலாக கவனித்து வருகிறார். அதேபோல் கமிஷனர் மாறுதலாகி சென்ற பின்பும் தற்போது கம்பம் கமிஷனர் கூடுதல் பொறுப்பில் உள்ளார்.இதனால் புதிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் நகராட்சி கவுன்சில் கூட்டமும் நடத்தவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த கூடலுார் நகராட்சியில் உடனடியாக நிரந்தர கமிஷனர் மற்றும் பொறியாளரை நியமிக்க அரசு முன் வரவேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை