உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை பணியின் தரம் கமிஷனர் ஆய்வு

சாலை பணியின் தரம் கமிஷனர் ஆய்வு

திருப்பூர்;மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குழாய் இணைப்பு வழங்கும் பணி மற்றும் புதிய ரோடு போடும் பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் ரோடுகள் சீரமைப்பு, புதிய ரோடு அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது. அவ்வகையில், 4வது மண்டலம் 55வது வார்டு வெள்ளியங்காடு, ஈஸ்வரமூர்த்தி நகர், 3வது மண்டலம், 60வது வார்டு, கோவில்வழி முதல் பெருந்தொழுவு செல்லும் ரோடு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ரோடு பணிகளை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆய்வு செய்தார்.சில இடங்களில் புதிய ரோடு அமைக்கப்பட்ட பகுதிகளில், குழி தோண்டி, ரோட்டின் தரம் மற்றும் தன்மை ஆய்வு செய்யப்பட்டது. பொறியியல் பிரிவு அலுவலர்கள் பணி நிலவரம் குறித்து விளக்கினர். அதே போல் கோவில்வழியில் புது பஸ் ஸ்டாண்ட் வளாகம் கட்டும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது.

குடிநீர் பணிகள்

திருப்பூர் மாநகராட்சி, 4வது குடிநீர் திட்டத்தில், 2 வது மண்டலம் 30வது வார்டு, ராம் நகர், பி.என்., ரோடு ஆகிய பகுதிகளில் வீட்டுக்குழாய் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியையும் கமிஷனர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை