உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ மதுரை வீரன் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் பூச்சாட்டு திருவிழா

ஸ்ரீ மதுரை வீரன் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் பூச்சாட்டு திருவிழா

அவிநாசி;அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் உள்ள, ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ கருப்பராயன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவிலில் பூச்சாட்டு விழா நடை பெற்றது.முன்னதாக, 11ம் தேதி கரையப்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ பொட்டுசாமி பொங்கல், ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டத்தரசி அம்மனுக்கு படைக்கலம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.பூச்சாட்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மதுரை வீரனுக்கு பந்தம் கட்டி ஆடுதல், அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல், பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், கிளி பிடித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இன்று மறுபூஜை மற்றும் மஞ்சள் நீர் விளையாட்டுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை